Wednesday, February 1, 2012

கவலைப்படாதே மனமே

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். - (லூக்கா 10:41).
.
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருப்பது போல மனிதனுக்கு சோர்வை உண்டாக்கும் வேர் கவலையில் தான் ஆரம்பமாகிறது. கவலைப்படாதவர்கள் இவ்வுலகில் யாருமே கிடையாது. அரசன் முதல் ஆண்டி வரை, பிரதம மந்திரி முதல் பியூன் வரை அனைவருமே கவலைப்படுகிறோம். ஒரு காரியத்தை குறித்து கவலைப்படும்போது அதில் அடங்கியிருக்கிற இரண்டுஉண்மைகளை நாம் அறிந்து கொள்வது நமக்கு பயனளிக்கும்.
.

1. நம்மால் மாற்ற முடியாத காரியங்களுக்காக கவலைப்படுதல்
2. நம்மால் மாற்றக்கூடிய காரியங்களுக்காக கவலைப்படுதல்
.

நம்மால் மாற்ற முடியாத காரியம்: நம் வாழ்வில் நடந்துள்ள சில காரியங்களை நம்மால் மாற்ற இயலாது. உதாரணமாக நமது நெருங்கின உறவினர் ஒருவர் திடீரென இறந்து விட்டார் என வைத்து கொள்வோம். அது நம்மை வெகுவாக பாதிக்கிறது. அதை குறித்து கவலைப்படுகிறோம். அதை நம்மால் மாறற் முடியுமா? சூரியன் வடக்கே உதிப்பதும், தெற்கே அஸ்தமாவதும் எப்படி இயலாத காரியமோ அதே போலத்தான் அவர் மீண்டும் உயிரோடு வருவதும் இயலாத காரியம். ஆகவே அதையே எண்ணி எண்ணி கவலைப்படாமல் கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்தி கொள்வதேபுத்திசாலித்தனமாகும்.
.

.

நம்மால் மாற்றக்கூடிய காரியம்: நமது வாழ்வில் நடந்துள்ள சில காரியங்களை நம்மால் மாற்ற முடியும். உதாரணமாக ஒரு நேர்முகத் தேர்வில் தேல்வி அடைந்து விட்டீர்கள். அதற்காக இந்த தோல்வியை வெற்றியாக மாற்றக்கூடிய நடவடிக்கையில் இறங்க வேண்டுமே தவிர கவலைக்கடலில் அமிழ்ந்து விடக்கூடாது. ஒரு வீட்டின் சுவரில் கீழ்க்கண்ட வாசகம் மாட்டப்பட்டிருந்தது. 'உன்னால் எதை மாற்ற இயலுமோ, மாற்ற முடியுமோ அதை மாற்ற முயற்சி செய். உன்னால் எதை மாற்ற முடியாதோ அதை மறந்து விடு. கனவில் கூட அதை குறித்து நினைக்காதே' என்பதாகும்.
.
இப்படி கவலைகள் விதவிதமாய் இருந்தாலும் எல்லா கவலைக்கும் ஒரே மருந்து ஆண்டவரின் பாதத்தில் அமருவதுதான். அந்த அறிவுரையை இயேசுகிறிஸ்து மார்த்தாளிடம் கூறுகிறார் வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு உணவு ஆயத்தம் செய்வது இயற்கை. ஆனால் வந்த விருந்தினர் தன்னை பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக நிறைய பதார்த்தங்களை செய்ய முயற்சிப்பது தேவயைற்றது. இதுதான் மார்த்தாள் செய்த தவறு. வந்தவர் யாரோ ஒருவர் அல்ல, ஐந்து அப்பம் இரண்டு மீனை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தவர். அவர் நினைத்தால் மார்த்தாள் ஒன்றும் செய்யாமலே நல்ல உணவை கிறிஸ்துவாள் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை எல்லாம் நினைக்காமல், தன் தங்கை மரியாள் தன்னுடன் சமையல் வேலை செய்யுமாறு இயேசுவிடம் கேட்கிறாள். வீட்டிற்கு வந்த விருந்தினரிடம் புகார் செய்வது சரியல்ல. மார்த்தாளுக்கு இயேசு கொடுத்த

பதில் என்ன தெரியுமா? ' நீ அனாவசியமாக அநேக காரியங்களை குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய்: உனக்கு தேவை என்ன தெரியுமா? பேசாமல் அந்த வேலைர அனைத்தையும் விட்டு விட்டு, உன் தங்கையை போல என் பாதத்தில் அமர்ந்து நான் சொல்லும் வார்த்தைகளை கேள், இதுதான் உன் கவலைக்கு மருந்து' என்றார்,
..
இதை வாசிக்கிற நாமும் கூட சிறு சிறு காரியங்களுக்காக, அனாவசியமான காரியங்களுக்காக, மாற்ற முடியாத காரியங்களுக்காக, இப்படி நடந்து விடுமோ, அப்படி நடந்து விடுமோ என கற்பனையாக கவலைப்பட்டு கொண்டே இருக்கிறோம். இந்த கவலைகளால் மன சோர்வடைந்து, செய்ய வேண்டிய காரியங்களை செய்ய முடியாதாடி சிந்தனைகளை சிதற விட்டு விடுகிறோம். ஆகவே கவலைப்பட நேரம் கிடைக்காத அளவு பகலில் நம்மை வேலைகளில் மூழகடித்து கொண்டோமானால், இரவில் எதையும் குறித்து கவலைப்படுவதற்கு முன் உறங்கி விடுவோம். 

கவலைப்படாதீர்கள் என்று சொன்ன கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்பட்டு, நம் பாரங்கள் கவலைகள் எல்லாவற்றையும் அவருடைய பாதத்தில் வைத்து விடுவோம். கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!
.
எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment