Tuesday, January 10, 2012

விலையேறப் பெற்ற புத்தகம்


கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவைஉயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சிசத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. -சங்கீதம் 19:7.

.ஒரு கர்த்தருடைய ஊழியர் சிறைச் சாலைகளுக்கு சென்று அங்குள்ளகைதிகளுக்குகர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்துவிட்டு,ஒவ்வொருவருக்கும் ஒரு வேதாகமத்தைஇலவசமாக கொடுத்து வருவதுவழக்கம்அதில் ஒரு கைதி, 'நீர் சொன்ன கிறி்துவின்வார்த்தைகளைநான் ஏற்றுக் கொள்கிறேன்ஆனால்இந்த வேதாகமத்தினால் எனக்குஎந்தபயனுமில்லைஎன்றுக் கூறினார்.
.
அப்போது அந்த ஊழியர் ஏன் என்று கேட்டதற்கு, 'ஐயா எனக்குபடிக்கவோஎழுதவோ தெரியாது. உங்களால் முடிந்தால்எழுத்துகளில்லாத ஒரு வேதத்தை எனக்குத் தாருங்கள்' என்றுக்கூறினார்.
.
இந்த வார்த்தைகள் அந்த ஊழியரை அதிகமாய் யோசிக்கவைத்தது. நன்குயோசித்து அவர், அந்த படிக்காதவருக்காக ஒருவேதாகமத்தைஉருவாக்கினார். அது நான்கே பக்கங்களைஉடையதாயிருந்தது. அந்தஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருநிறத்தில் இருந்தது. அதை அந்த கைதியிடம்கொடுத்து, அதைகீழ்க்கண்டவாறு விளக்கினார்:
.
முதல்பக்கம் கறுப்பாய் இருப்பது நாம் தேவனுடையவார்த்தையைகேட்பதற்கு முன், நம்முடைய இருதயம் இருக்கும்நிலையும், அதுபாவத்தினால் கறுப்பாக உள்ளதையும் குறிக்கிறது.
.
இரண்டாவது பக்கம் சிவப்பு நிறம். அது கிறிஸ்து நமக்காக சிலுவையில்தம்முடைய மாசற்ற இரத்தத்ததை சிந்தி, நம்மை மீட்டுக் கொண்டதைக்குறிக்கும்.
.
மூன்றாவது பக்கம், வெண்மை நிறம். அது நம்முடைய பாவங்கள்கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நாம் பரிசுத்தமாகி இருப்பதைக்குறிக்கும்.
.
நான்காவது பக்கம், தங்க நிறம். அது இரட்சிக்கப்பட்ட ஒரு ஆத்துமா போய்சேரும் நித்திய சந்தோஷமான பரலோகத்தைக் குறிக்கும்” என்றுக் கூறினார். அதை அந்தக் கைதி சந்தோஷமாய் பெற்றுக் கொண்டு தன் மார்போடுஅணைத்துக் கொண்டு மகிழ்ந்தார்.
.
உலகத்திலேயே சிறந்த புத்தகமாகிய வேதத்தை நமது சொந்த மொழியில்வாசிக்கும்படியான சிலாக்கியத்தை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார். எத்தனையோ மொழிகளில் இன்னும் வேதாகமம்மொழிபெயர்க்கப்படவில்லை. இது தமிழர்களாகிய நமக்கு தேவன்பாராட்டிய கிருபையாகும்.
.
அப்படி நாம் கிருபையாய் பெற்றுக் கொண்ட வேதாகமத்தை நம்மில்எத்தனைப் பேர் தினமும் வாசிக்கிறோம்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொருநீதிமொழிகளை வாசிக்கும்படி 31 அதிகாரங்கள் நீதிமொழிகளில் இருக்கிறது. நம்மை சீர்திருத்தும்படியாக அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்கள்உள்ளது. இன்னும் எத்தனையோ தேவ இரகசியங்கள் தேவனுடையவார்த்தையில் அடங்கியுள்ளது. கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும்,அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்துஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது என்று சங்கீதம் 19:9-10-ல் வாசிக்கிறோம். ஆம் அது தேனிலும் இனியது.
.
நம்முடைய சொந்த மொழியில் வாசிக்கும்படியாக, நம்முடைய கைகளில் தவழும் வேதாகமத்தை படிக்கக்கூடாதபடி, பாமரராய் இருக்கும் தமிழர்கள்எத்தனைப்பேர்? அரிய பொக்கிஷமாகிய இந்த வேதத்தை அவர்கள் படிக்கப் கூடாதபடி அவர்கள் எழுத்தறிவில்லாதவர்களாய் இருக்கிறார்கள். சில வேளைகளில் நான் ஜெபிக்கும்போது, வாக்குதத்தங்கள் நிரம்பிய, நம்மைத் தேற்றும், ஆற்றும் இந்த கிருபையுள்ள வார்த்தைகளை படிக்க்கூடாதபடி இருக்கிற ஜனத்தை நினைத்து, கர்த்தருடைய சமுகத்தில் கண்ணீர் விடுவேன், கர்த்தர் எனக்கு ஒரு பாரத்தை அவர்கள் மேல் கொடுத்தார். அப்போது நான் நினைப்பதுண்டு, ஓய்வு பெற்று வீட்டில் ஓயவெடுக்கும் படித்த நமது பெற்றோர்கள் அல்லது வயதானவர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கிராமங்களில் அல்லது தங்களது வீடடுப் பக்கத்தில்இருக்கும் படிப்பறிவில்லாத மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கலாமே! அது அவர்களுக்கு எத்தனையோ வகையில் பிரயோஜமாயிருக்குமே! இதற்காக நான் தொடர்ந்து ஜெபித்து வருகிறேன்.கர்த்தர் தம் வேளையில் அதை செய்வார் என்று விசுவாசிக்கிறேன். அதற்காக நீங்களும் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா!
.
வாசிக்க சிறந்த புத்தகம் வேதம்
அன்றாடம் நீ வாசித்தால் குன்றாமல் நடத்துமே
ஆம் வாசிக்க சிறந்த புத்தகம் வேதம்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment