Saturday, October 22, 2011

பைபிளின் ஆறாம் நாளும் அறிவியலும் (பாகம்-1)

அன்பானவர்களே இன்று நாம் பைபிளில் மிருகங்கள் மற்றும் ஊரும் பிரானிகள், முக்கியமாக மனிதன் உருவாக்கப்பட்ட வரலாற்றை அறிவியல் நோக்கோடு ஆராயவிருக்கிறோம். இதை பைபிளில் ஆதியாகமம் 1;24-31 வரையுள்ள வசன்ங்களில் வாசிக்கலாம். 
 
இதுவரை நாம் பார்த்த காரியங்களின் படி முதலாவது தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் அதற்குப் பின்புதான் தரை வாழ் உயிரினங்கள் உண்டாகின. நமது ஆண்டவர் தரைவாழ் உயிரின்ங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார், அவை ஊர்வன, நாட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள், ஆகியவைகள் ஆகும்.
பரினாமக் கொள்கைக்காரர்கள் விலங்குகள் எல்லாம் காட்டில் தான் இருந்தன என்றும், மனிதன் நாகரீக வளர்ச்சியடைந்த பின்பு தன் உதவிக்காக சில மிருகங்களை தன் அருகில் தன் வேலைக்காக வைத்துக் கொண்டான் இதன்படியே நாட்டு மிருகங்கள் தோன்றின. என்று சொல்லுவார்கள்.
 
ஆனால் பைபிள் ஒரு சம்பவத்தை யோபுவின் புத்தகத்தில் விவரிக்கிறது (யோபு 39;10) காண்டாமிருகம் நல்ல வலிமையான விலங்குதான், மனிதா நீ அதை எருதுக்கு பதிலாக ஏரில் பூட்டி நிலத்தை உழுவாயா? என்று சவால் விடுகிறார். மேலும், நரி, கரடி, கழுதைப்புலி, செந்நாய்க் கூட்டம், போன்ற விலங்குகள் என்னதான் முயற்சி செய்தாலும் அவைகள் மனிதனுடன் பழகவோ நட்பு பாராட்டவோ மறுக்கின்றன என்று சொல்லுகிறார்கள். இதற்கு பைபிள் அழகாக பதில் சொல்லுகிறது. ஆம் அவைகள் காட்டில் வாழ்வதற்காகவே கடவுள் உண்டாக்கினார் என்று ஆனால் ஆடு, மாடு, கழுதை, ஒட்டகம், பூனை நாய் முதலியவைகள், நாட்டு மிருகங்கள் இவைகள் மனிதனுக்கு உதவிசெய்யவும், வீட்டில் வளர்க்கவும் உண்டாக்கப்பட்டன. ஆனாலும் கடவுள் மனிதனுக்கு அனைத்து மிருகங்களின் மீதும் அடக்கியாளும் அதிகாரத்தைக் கொடுத்தார்.(ஆதி 1;26)
இதைத்தான் நாம் இன்று காண்கிறோம், யானை, புலி சிறுத்தை சிங்கம் போன்ற விலங்குகள் எல்லாம் இன்று மனிதனால் அடக்கியாளப்படுகின்றன. 
 
முதுகெலும்பில்லதவை, முதுகெலும்பு உள்ளவை,
பரினாமக் கொள்கைக்காரர்கள் கணக்குப்படி மெல்லுடலிகள் (முதுகெலும்பில்லாதவைகள்) வாழ்ந்த காலமான காம்பிரியன் பாறை (100 கொடி ஆண்டுகள்) காலத்து படிமங்களைலும், டினோசர்(Dionosaur), பிராண்டாசாரஸ் முதலிய அழிந்து போன மிருகங்கள் வசித்த மிருகங்கள் வசித்த கிரிடாஷியஸ் யுக (20 கோடி ஆண்டுகள்) காலப் பாறைபடிமங்களில் ட்ரயாசிக் யுகத்தில் (40 கோடி ஆண்டுகள்) வாழ்ந்த சில ஊரும் பிரானிகளும் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே இக்கால மனிதனுக்கு ஒப்பான படிமங்கள் கிடைத்துள்ளன அப்படியானால் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனிதன் இருந்ததாகக் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், அன்றைய டைனோசர்கள் இன்று பறவைகளாக மாறிவிட்டன என்றால் மனிதன் ஏன் மாறாமல் இருக்கிறான்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? (இது பற்றிய மேலதிக விவரம் அறிய படைப்பின் இரகசியங்கள் தொடரின் ஆரம்ப கட்டுரைகளைப் படிக்கவும்).
 
இனி மனிதன் உருவான வரலாற்றைப் பார்ப்போம் இதன் இரண்டாம் பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்... காத்திருங்கள்..............


 Thanks : Bible Uncle
http://bibleuncle.blogspot.com

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment